தமிழ் සිංහල English
Breaking News

ரணிலுடன் யாரும் வேலை செய்ய முடியாது .!

 • எஸ்.ஐ.கீதபொன்கலன்
 • ஐந்து வருட காலத்துக்குள் ஜனாதிபதி சிறிசேன மற்றும் ஒரு சதியின் ஒரு பகுதியாக ஆகிவிட்டார். முதலாவது சதியில் 2014ல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வருவதற்காக அவர் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து பிரிந்திருந்தார். அவர் பிரிந்து சென்றதை ராஜபக்ஸவும் மற்றும் அவரது விசுவாசிகளும் காட்டிக்கொடுப்பு எனக் கருதினார்கள்.
 • 26 ஒக்ரோபர், 2018ல் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை புதிய பிரதமராக நியமித்ததை தொடர்ந்து தற்போதைய சதி வெளிப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் கிட்டத்தட்ட எனக்குத் தெரிந்த எல்லோரையுமே இந்த நகர்வு ஆச்சரியப்பட வைத்துள்ளது. 2018 ஜனவரியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகள் மகிந்த ராஜபக்ஸவின் பக்கம் சென்றதினால், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் என்பனவற்றின் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவானார். ஏனவே விசேடமாக ஐதேக வின் அங்கத்தவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் சிறிசேன தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என நம்புவதற்கு தகுந்த காரணங்கள் உள்ளன.
 • தற்சமயம் ஸ்ரீலங்காவில் இரண்டு பிரதமர்கள் உள்ளபடியினால் இந்த நடவடிக்கை ஸ்ரீலங்காவில் ஒரு அரசியல் நெருக்கடியைப் பற்ற வைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை தான் பெற்றிருப்பதினால் தானே சட்டபூர்வ பிரதமர் என்கிற நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்கா கொண்டுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாராளுமன்றத்தில் தனக்கு குறைந்தது 113 அங்கத்தவர்களின் ஆதரவு உள்ளது என்று விக்கிரமசிங்கா வாதிடுகிறார். இந்தப் பிரச்சினை நெருக்கடி மற்றும் ஸ்திரமற்றதன்மை என்பனவற்றை நீட்டிக்கும் சாத்தியம் உள்ளது, இந்தக் காலகட்டத்தில் நாட்டுக்கு தேவையில்லாத ஒரு விஷயம் இது.
 • காரணம்?
 • ரணில் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிப்பதற்கான காரணம், ஐதேக வின் ஊழல் மற்றும் தேசிய விரோத நிகழ்ச்சித் திட்டத்தை ஊக்கிவிப்பதுதான் என ஜனாதிபதி சிறிசேன குற்றம் சாட்டினார். ஒரு அரசியற் கட்சியான ஐதேகவுக்கும் மற்றும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் இடையில் ஒரு பிளவை ஏற்படுத்த அவர் முயற்சி செய்தார்.  அவரது பேச்சில் ஐதேக வை பிளவுபடுத்தும் இந்த உத்தி  நன்கு சிந்திந்து செயல்படுத்தப்பட்ட அம்சமாகத் தோன்றியது. ஐதேகவில் ஏற்படும் ஒரு பிளவு நாடாளுமன்றத்தில் ராஜபக்ஸ தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தீவிரமாக உதவி செய்யும். இருப்பினும் அவரது கூற்று என்னவென்றால் ஒரு ஜனாதிபதியாக தன்னால் விக்கிரமசிங்காவுடன் வேலை செய்ய முடியாது என்பதாகும். எனவே அவரை பதவி நீக்கவேண்டியது அவசியம்.
 • எதிர்பார்த்ததைப் போல, அமைச்சரவையின் புதிய தலைவராக ராஜபக்ஸ ஏன் நியமிக்கப்பட்டார் என்கிற கேள்விக்கு அவர் செல்லவில்லை. அது ஒரு அருவருக்கத்தக்க நிகழ்வாக இருந்திருக்கும், ஏனென்றால் ராஜபக்ஸ ஒரு சுத்தமான மாற்றீடு மற்றும் அவருடன் தன்னால் எளிதாக வேலை செய்ய முடியும் என்று சிறிசேனவால் மற்றவர்களைப் பார்த்து நேரடியாகக் கூறமுடியாது. 2015 ஜனாதிபதித் தேர்தலில் சிறிசேன போட்டியிட்டது ராஜபக்ஸ சர்வாதிகாரம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி என்பனவற்றைக் கடைப்பிடிக்கிறார் என்று குற்றம் சாட்டியே.
 • ராஜபக்ஸ தனது பங்குக்கு, தான் நிருவாகத்தை கையேற்க சம்மதித்திருப்பது திரும்பவும் அழிவில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகவே என்று கோரிக்கை விடுத்தார். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, சீரழிந்துள்ள பொருளாதாரம், வேகமாகச் சரிந்துவரும் ரூபாயின் மதிப்பு என்பனவே விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து அகற்றவும் அவரது அமைச்சரவையைக் கலைப்பதற்குமான காரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த மோசமான சூழ்நிலமையில் இருந்து இப்போது நாங்கள் நாட்டைக் காப்பாற்றுவோம் என்பதுதான் ராஜபக்ஸவின் செய்தி. ஆகவே ஜனாதிபதி மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ஆகியோரின் கூற்றுப்படி, ஆட்சிக்கவிழ்ப்பு அல்லது சிறிசேன – ராஜபக்ஸ அச்சினை பின்தொடர்பவர்களின் கோரிக்கையானது ரணில் விக்கிரமசிங்காவின் மோசமான அரசாங்கத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சியை தாங்கள் ஏற்றெடுத்திருக்கிறோம் என்பதாகும்.
 • எனினும், ஜனாதிபதி சிறிசேனவுக்கு அதில் என்ன உள்ளது? சிறிசேனா ஒன்றும் ஸ்ரீலங்காவின் மண்டேலா அல்ல. அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி. சவாலானதும் மற்றும் ஆழமான சிக்கல் நிறைந்த அரசியலில் இருந்து தப்பிக்கத் துடிப்பவர். உண்மை இதுதான் ஐதேக மற்றும் விக்கிரமசிங்கவுடனான அவரது யுத்தத்தில் 2020ல் இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறினை அவர் இழந்துவிட்டார். அடுத்த தேர்தலில் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு ஐதேக உதவி செய்யாது என்பது தெளிவு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்குகளைக் கைப்பற்றவும் அவருக்கு வாய்ப்பு இல்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வர்காளர்கள் இன்னும் ராஜபக்ஸவுக்கு விசுவாசமாகவே உள்ளார்கள். சமீபத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் சிறிசேன தலைமையிலான பிரிவு தேசிய வாக்குகளின் விகிதத்தில் மூன்றாவது இடத்தையே பெற்றது.
 • ஆகவே, எனக்கு மிகத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால் சிறிசேனவின் தற்போதைய நகர்வில் உள்ளது 2020 மற்றும் அதற்கு பின்னாலும் உள்ள ஜனாதிபதி தேர்தல் பற்றிய கணக்கு கூட்டல்களே. தற்போதைய சிறிசேன – ராஜபக்ஸ கூட்டணி ஒரு ‘கிவிசும’ (ஒப்பந்தம்) இல்லாமல் உருவாகியிருக்க முடியாது. மகிந்த ராஜபக்ஸ அவரது தற்போதைய பிரதமர் நியமனத்துக்குப் பதிலாக எதையாவது தருவதாக வாக்களித்துள்ளாரா? அடுத்த தேர்தலில் ராஜபக்ஸ குழு சிறிசேன ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரவு வழங்குமா? மாற்றீடாக 2020க்குப் பிறகு சிறிசேன பற்றி அவர்களுக்கு வேறு ஏதாவது திட்டம் உள்ளதா? ராஜபக்ஸவுக்கும் மற்றும் சிறிசேனவுக்கும் இடையிலான சாத்தியமான ஒப்பந்தத்தை பற்றிய விபரங்கள் மிகவும் இரகசியமாகவே உள்ளன. இங்கு கட்டாயமாகக் குறிப்பிட வேண்டியது, ராஜபக்ஸ போன்ற புத்திசாலியான அரசியல்வாதிகளுக்கு தேவைப்பட்டால் சிறசேன மற்றொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு வரமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்பது நன்றாகத் தெரியும். எனவே சிறிசேன மற்றும் ராஜபக்ஸ இடையிலான உறவின் தன்மை பற்றி கவனமாக அவதானிக்க வேண்டிய தேவை உள்ளது.
 • எண் விளையாட்டு
 • ராஜபக்ஸ அரசாங்கம் 2015ல் வெளியேற்றப்பட்டது பிரச்சினையான ஆட்சிப்பாணி காரணமாகவே. எனினும், ராஜபக்ஸ பெரும்பாலும் தேர்தல் சட்டங்களின்படியே விளையாட்டு நடத்தினார். அவர் அளவுக்கதிகமான தேர்தல்களை நடத்தினார், மற்றும் 2015ல் தோற்கடிக்கப்பட்டதும் பெரிய பிகு எதுவும் பண்ணாமல் அவர் தனது அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். கணிசமானளவு ஸ்ரீலங்கா மக்களின் கண்களுக்குத் சட்டவிரோதமானது மற்றும் பிரச்சினையானது என்று தோன்றும்போது, ராஜபக்ஸ பிரதமர் பதவியை ஏற்கத் தயாராகி ஒரு அரசாங்கத்தை அமைக்க வேலை செய்து கொண்டிருக்கும் வரலாறு என்னுள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. சட்டபூர்வமான தேர்தல் மூலம் அவர் பிரதமராக வரவில்லை. விரோதமான பகைமையான ஏற்றெடுப்புக்கு பல்வேறு தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 • இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்னவென்றால் ராஜபக்ஸ நிருவாகம் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒரு ‘கணக்கெடுப்பு வாக்கு’ ஒன்றைச் சமர்ப்பிக்கும் என்று. இந்த கணக்கெடுப்பு வாக்கு என்பது முழு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்பு செலவுகளுக்கு நிதி திரட்டுவதற்கான ஒரு இடைக்கால நடவடிக்கையாகம். வாக்காளர்களுக்கு அவர்களது பொருளாதார துயரங்களைக் குறைப்பதற்காக அளவுக்கு மீறிய உதவிகளைச் செய்வதாக வாக்குறுதிகள் அள்ளி வீசப்படலாம். இந்த அனுகூலமான நடவடிக்கைகளுக்கு வெகுஜனம் சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்க்கலாம். ஏனைய அரச வளங்களையும் தேர்தலின்போது எளிதில் கையாளலாம்.
 • புதிய அரசாங்கத்தை தொடர்வதற்கும் மற்றும் ஒரு கணக்கெடுப்பு வாக்கினை நிறைவேற்றுவதற்கும் ராஜபக்ஸ குழு பாராளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், இந்தக் கணத்தில் அது பிரச்சினையான ஒன்றாகத் தென்படுகிறது. ராஜபக்ஸ குழுவினருக்கு பாராளுமன்றத்தில் நிரூபிக்கக் கூடிய பெரும்பான்மை இருக்குமென்றால், அவர்கள் சந்தோஷத்துடன் தேசிய பாராளுமன்றத்துக்குச் சென்று அதை எதிர்கொள்வார்கள். அவர்கள் அதைச் செய்யவில்லை எனென்றால் இப்போது அந்தக் குழுவுக்கு குறைந்தபட்சம் பாராளுமன்றத்தில் 113 அங்கத்தவர்களின் ஆதரவு இல்லை. எனவே அவர்கள் ஒருங்கிணைத்து பின்னர் நிரூபித்தல் எனும் ஒரு மூலோபாயத்தை கையாளுகிறார்கள். அந்த உத்தியின் ஒரு பகுதியாக நவம்பர் 16வரை ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைப்பு சட்டபூர்வமானதாக இருந்தாலும் ஜனநாயகமற்றதாகத் தெரிகிறது.
 • பாராளுமன்றத்தை ஒத்திவைக்கப்பட்டதின் மூலம் கிடைத்த நேரத்ததை (1) அரச இயங்திரங்களின்மீது ராஜபக்ஸ குழுமம் அதிகாரத்தையும் மற்றும் திறனையும் ஒருங்கிணைப்பதற்கும் (2) எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சம்மதிக்க அல்லது விலைக்கு வாங்கப் பயன்படுத்தப்படும். நாட்டின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ராஜபக்ஸவின் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிதியின் சாத்தியமான தலையீடு இருக்கிறது என்பதை புறந்தள்ளிவிட முடியாது. ராஜபக்ஸவின் நியமனம் குறித்து வாழ்த்து தெரிவித்த முதல் நாடுகளில் ஒன்று சீனாவாகும். அதேபோல சர்வதேச ஆதரவுக்கு அவர் சீனாவை கணக்கில் எடுக்கலாம். ராஜபக்ஸ குழு மேலும் நம்பக்கூடியது, அவர்கள் நிறுவியுள்ள புதிய அரசாங்கத்தின் தோற்றம்  ஐதேக அங்கத்தவர்களை வசப்படுத்த உதவும் என்று.
 • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வசம் 95 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) ஒரு வாக்கினை வழங்கலாம். அதனால் ராஜபக்ஸ குழுவுக்கு 96 வாக்குகள் நம்பகமாக உள்ளன. ஆகவே அவரது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ராஜபக்ஸ சுமார் 17 பாராளுமன்ற அங்கத்தவர்களை ஐதேக தலைமையிலான கூட்டணியில் இருந்து சம்மதிக்க வைக்க வேண்டும். ராஜபக்ஸ அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளை  குறிப்பாக ஐந்து ஆசனங்களைக் கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசை இலக்கு வைக்கலாம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சி மாறச் சம்மதிக்கும் என்றால் ராஜபக்ஸவுக்கு இன்னும் 12 ஐதேக அங்கத்தவர்களின் ஆதரவு தேவைப்படும். ஐதேக அங்கத்தவர்களின் மீது ரணில் விக்கிரமசிங்காவின் பிடியை கருத்தில் கொண்டால் ஐதேகவில் இருந்து 12 அங்கத்தவர்களை பிடித்திழுப்பது இலகுவான ஒரு இலக்கு அல்ல. ஆகவே எப்போது பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டால் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ராஜபக்ஸ கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும்.
 • இதற்கிடையில் ஐதேகவுக்கு தனது சொந்தத்தில் 87 அங்கத்தவர்கள் உள்ளார்கள் அது :முஸ்லிம் கட்சிகளினதும் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் ஆதரவைப் பாதுகாப்பதை சமாளித்து வெற்றி கண்டாலும் அதற்கு இன்னும் ஆறு ஆசனங்கள் குறைவாக உள்ளன. எனது கண்ணோட்டத்தில் ஜாதிக ஹெல உருமய விசுவாசத்தை மாற்றுவது சாத்தியமில்லை. ஜேவிபி தான் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அது நடுநிலை வகிக்கும் சாத்தியம் உள்ளது.
 • ஐதேகவுக்கு உள்ள ஒரேவழி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினைப் பெற்று 113 அங்கத்தவர்களின் கையெழுத்தை சமாப்பிப்தே ஆகும். ரி.என்.ஏ க்கு உள்ளேயுள்ள உள்ளகப் பிரச்சினைகள் மற்றும் பொதுவான தமிழர் உணர்வுகள் என்பதைக் கணிக்கும்போது, ஐதேகவினை பகிரங்கமாக உறுதிப்படுத்துவது ரி.என்.ஏக்கு கடினமான ஒன்றாகவே இருக்கும். ஐதேகவுக்கு சாதகமாக பாராளுமன்றில் வாக்களிப்பது வேறு விஷயம், ரி.என்.ஏ, உத்தியோக பூர்வமாக பிரதான எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை ஏற்றிருப்பதற்கு மாறாக அதைச் செய்து வருகிறது. அதனால் ஐதேகவுக்கு பாராளுமன்றில் 113 கையெழுத்துக்களைச் சமாப்பித்து தனது பெரும்பான்மையை நிரூபிப்பது எளிது. ஐதேக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டும்படி கோரிக்கை வைப்பது இதைத்தான் விளக்குகிறது.
 • : எஸ். குமார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com