தமிழ் සිංහල English
Breaking News

இடைத்தேர்தல் தேர்தலை சந்திக்க தயாராகும் தினகரன் .!

முதல்வர் பழனிசாமி மீது தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்ட காரணத்தினால் அவரை முதல்வர் பதவியிலிருந்து மாற்றுமாறு ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களை அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். ஆனால், தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என தெரிவித்து நீதிமன்றத்தினை நாடியது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் தரப்பு.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறுபட்ட தீர்ப்பளித்த காரணத்தினால், 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக மூன்றாவது நீதிபதி சத்திய நாராயனா தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என தீர்ப்பளித்தார்.

மேற்கண்ட தீர்ப்பினையடுத்து தாங்கள் உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக தினகரன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை, ஏற்கனவே காலியாகவுள்ள 2 தொகுதிகள் மற்றும் இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை சந்திக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தினகரனை தவிர மற்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் அதிமுகவில் இணையுமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com