தமிழ் සිංහල English
Breaking News

ஓட்டப்பந்தயம் ஒன்றின்போது திடீரென ஒரு வீராங்கனையில் காலில் முறிவு.!

ஓட்டப்பந்தயம் ஒன்றின்போது திடீரென ஒரு வீராங்கனையில் காலில் முறிவு ஏற்பட, அடுத்து அவர் செய்த செயல் காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

ஜப்பானில் நடைபெற்ற ரிலே மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றின்போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் Rei Iida (19) என்னும் அந்த இளம் வீராங்கனை வெற்றி இலக்கிற்கு 600 அடி தூரம் இருக்கும்போது திடீரென கீழே விழுகிறார். தனது கால் முறிந்து விட்டது என்பது நன்றாக தெரிந்தும் அவர் தொடர்ந்து ஓட்டத்தை முடிக்க முடிவு செய்கிறார்.

ஆனால் அவரால் ஓட முடியவில்லை. சற்றும் தயங்காத அந்த இளம் வீராங்கனை, உடனே தனது கைகளையும் முழங்கால்களையும் பயன்படுத்தி நான்கு கால்களால் தவழ்ந்து செல்லத் தொடங்குகிறார்

நடுவர் ஒருவர் அவரை ஓட்டத்தை விட்டு விடுமாறு கூற, மறுக்கும் அந்தப் பெண் என் இலக்கை அடைய இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என கேட்டவாறே பந்தயத்தை தொடர்ந்திருக்கிறார்.

இரத்தம் சொட்டச் சொட்ட தவழ்ந்து வரும் அந்தப் பெண் தன் இலக்கை அடைந்த பின்னரே ஒரு ஓரமாக சென்று அமர்கிறார்.காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது அந்த இளம் வீராங்கனையின் செயல்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com