தமிழ் සිංහල English
Breaking News

தமிழ் முற்போக்கு கூட்டணி பிளவு.. 3 எம்.பி.கள் மஹிந்தைக்கு ஆதரவு .!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நேற்று இரவு 06.30 மணிக்கும் 07.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை இரகசியமாகச் சென்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனி வாகனம் ஒன்றின் மூலம் அவர் யாருக்கும் தெரியாத வண்ணம் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டமை உள்நாடு மாத்திரமன்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், பதவி விலக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் யார் பிரதமர் என்ற பதவி போட்டி நிலை நிலவியது.

அதனைத் தொடர்ந்து தமக்கான பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பவர்கள் அந்த வாய்ப்பு கிட்டும் என்ற நிலை வந்தவுடன் தமக்கான ஆதரவினை வழங்குமாறு

முன்னாள் மற்றும் இன்னாள் பிரதமர்களான ரணில், மகிந்த ஆகியோர் சிறுபான்மை கட்சிகளில் மற்றும் இதர அரசியல் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தனர்.

அத்துடன், தமிழர்களின் ஏக பிரதிநிதி என கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நேரடியாகவே தமக்கு ஆதரவு வழங்குமாறு இரு தலைவர்களும் கோரியிருந்தனர்.

இந்நிலையில், மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தாம் யாருக்கு ஆதரவளிக்கப்போகின்றோம் என அறிவிக்காத நிலையில் தற்போது மனோ கணேசன் மகிந்த ராஜபக்சவை இரகசியமாக சென்று சந்தித்துள்ளமை வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியில் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த (முன்னாள்) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மகிந்தவிற்கு ஆதரவளிக்கின்றார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டணியைச் சேர்ந்த (முன்னாள்) அமைச்சர் திகாம்பரமும் மகிந்தவிற்கு ஆதரவளிப்பார் என எதிர்வுகூறப்படுகின்றது.

இந்நிலையில், கூட்டணியைச் சேர்ந்த இரண்டு முக்கிய புள்ளிகள் மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருக்கும்போது மனோ கணேசனும் மகிந்தவிற்கு ஆதரவளிப்பார் என்பது உறுதியாக புலப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் முற்போக்கு கூட்டணி பிளவு.. 3 எம்.பி.கள் கட்சி தாவியுள்ளதாகவும் தாவல் வெளியாகி உள்ள அதே வேளை கொழும்பு தமிழ் அரசியல் தலைவரின் கபினட் கோரிக்கை மகிந்த தரப்பால் நிராகரிக்கப் பட்ட நிலை உள்ளதாக கூறப்படுகிறது… என எமது புலனாய்வுச் செய்தியாளர் களபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்

 

 

 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com