தமிழ் සිංහල English
Breaking News

பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை.!

‘மீ டூ’வில் நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் கூறிய நிலையில், சுருதி விளம்பரத்துக்காக பொய் சொல்வதாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாருக்கு அர்ஜுன் மகளும். நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எதன் அடிப்படையில் என் தந்தை மீது சுருதி பாலியல் புகார் கூறுகிறார். நானும் ஒரு நடிகைதான். எனக்கு அனுபவம் மிகக் குறைவுதான். ஆனால் படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். என் தந்தை இயக்கிய ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன்.

காதல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை உதவி இயக்குனருடன் சேர்ந்து என் தந்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். உதவி இயக்குனருடன் அன்று அவர் நெருக்கமாக நடித்ததால் அந்த நபர் வெளியே வந்து அர்ஜூன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியுமா?.

இவையெல்லாமே நடிகர், நடிகையரின் வேலையில் ஒரு பகுதியாகும். அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறி இருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே.

என் தந்தை இரவு விருந்துக்கு அழைத்ததாக சுருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ, வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. விஸ்மயா படம் குறித்து என்னிடமும் என் சகோதரியிடமும் என் தந்தை பேசிக்கொண்டிருந்தபோது படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாக இயக்குனர் கூறியதாகச் சொன்னார்.

மேலும் அந்தக் காட்சிகளை குறைக்குமாறு சொல்லியிருப்பதாகவும் கூறினார். சுருதி முன்வைத்துள்ள அர்த்தமற்ற புகாரால் என் தந்தை அவரை நினைத்து வருத்தப்படவில்லை. எங்களை நினைத்தும் எங்கள் மனநிலையை நினைத்தும் தான் வருந்துகிறார். பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. சுருதி அதைப் பயன்படுத்துவத

ஒரு பெண்ணாக மீடூ என்னும் இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சுருதி போன்றவர்கள் விளம்பரத்துக்காக பொய் புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ருதிக்கு எதிராக என் தந்தை சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்வார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com