தமிழ் සිංහල English
Breaking News

சட்டவிரோத தமிழ் பிரதேச செயலகத்திற்கு பிரதியமைச்சர் ஹரீஸ் அங்கீகாரம்!

22.10.2018 ல் கல்முனை பிரதேச செயலகத்தில் புதிய செயலாளர் நஸீர் அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டிடத் தொகுதியை நிர்மானத்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

கல்முனை இலங்கை வங்கி வீதியில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனை பிரதேச செயலகத்திற்கென கட்டிமுடிக்கப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய இரண்டு மாடிக்கட்டிடம் ஒரே கூரையின் கீழ் கல்முனை பிரதேச பொது நிர்வாகங்களை செய்வதற்கு தயார் படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கட்டுமானம் கட்டுவதற்கு வாக்குறுதி வழங்கியிருப்பது (பல பெயர்களால் கொண்டு அழைக்கப்படும்) சட்டவிரோத தமிழ் பிரதேச செயலகத்திற்கு வழங்கிய அங்கீகாரமாகும்.

கல்முனையில் தனியார் கட்டிடங்களில் இயங்கிவரும் அம்பாறைக்கு எடுத்துச் செல்லப்படும் அபாய நிலையில் உள்ள அரச நிறுவனங்களுக்கு (UDA,NAIDA etc…) போன்ற அரச நிறுவனங்களுக்கு கட்டுமானம் கட்டுவதற்கு அந்த நிதியை பாவிப்பது அறிவுடமையாகும். அதைவிடுத்து ‘காவின் புத்தகத்தில் போட்டு எழுதும் மஹர்’ போல் வாக்குறுதி வழங்குவது ஒரு கேலிக்கூத்தாகும்.

கல்முனை மாநகரின் கௌரவ மேயர் அவர்களால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழ் டயஸ் போராவின் மேலுள்ள நேசம் காரணமாக வாபஸ் பெற அழுத்தம் கொடுத்தால் அது ஒரு சமூகத் துரோகமாகும். இவ்வாறான ஈனச் செயலை சகோதரர் ஹரீஸ் அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார் என நான் நம்புகின்றேன். அதை மீறி செயல்பட்டால் கல்முனை கொந்தளிக்கும் சாய்ந்தமருதைவிட மோசமான ஒரு நிலை உருவாகும்.

மூவினமும் ஐக்கியத்துடன் வாழும் ஒரே கூரையின் கீழ் இயங்கும் பிரதேச செயலகமே எங்களது தாகம்.

-நசீர் ஹாஜி-
கல்முனை

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com