தமிழ் සිංහල English
Breaking News

ஐக்கிய சமாதான கூட்டமைப்பிலிருந்து ஹஸனலி அதிரடி நீக்கம் .!

முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேறிய ஹஸனலி ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் இணைந்து  றிசாத் அணியுடன்  ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டார்கள் . இக்கூட்டமைப்பினால் பல உறுப்பினர்களை பெறவும் முடிந்தது .

இக்கூட்டமைப்புக்குள் இப்ப முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது . நிந்தவூர் தவிசாளர் தாஹிர் மற்றும் பாலமுனை அன்சில் ஆகியோர் றிசாத் அணியுடன்  இணைந்து கொண்டனர் . தனித்து விடப்பட்ட ஹஸனலி றிஷாத்துடன் இணைந்து பயணிப்பதை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு விரும்ப வில்லை .

முஸ்லிம் காங்கிரசை அழிப்பதே றிசாத் ,ஹஸனலி மற்றும் பஷீர் சேகு தாவூத் இவர்களின் நோக்கமாக இருக்கின்றது . முஸ்லிம் சமுகம் பற்றி எந்த சிந்தனையும் கிடையாது . றிசாத் ஒரு அரசியல் வியாபாரி ,சமூக சிந்தனை அவரிடம்  கிடையாது . பாராளுமன்றத்தில் மிஸ்மில்லாஹி சொல்லி அரபு வசனங்கள் பாவிப்பது வியாபார நோக்கமே ,இவர் பாராளுமன்றத்தில் பாவிக்கும் அரபு வசனங்களை அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்து அரபு நாடுகளுக்கு அனுப்பி பணம் வசூலிக்கின்றார் .பல வழிகளிலும் ஊழல் செய்கின்ற ஊழல் வாதி இப்படிப்பட்ட நபரிடம்  ஹஸனலி கூட்டு வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவர் மிஹிலர் மௌலவி தெரிவித்துள்ளார் .

ஐக்கிய சமாதான கூட்டமைப்பிலிருந்து ஹஸனலி,பஷீர் சேகு தாவூத் மற்றும் நாசர் ஹாஜி ஆகியோரை கட்சிலிருந்து நீக்குவதற்கு மிஹிலர் மௌலவி தேர்தல் ஆணையாளரை சந்தித்து பேசியதாகவும் , உடனடியாக கட்சியை விட்டு நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com