தமிழ் සිංහල English
Breaking News

நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் .!

நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு கடற்கரையோரங்களில் காலைவேளையில் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ,வவுனியா மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவுவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது கடற்பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com