தமிழ் සිංහල English
Breaking News

மைத்திரியை கொன்று ரணிலை ஜனாதிபதியாக்க றோ திட்டம் .!

இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவரை ஆதாரம் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தப் படுகொலைச் சதிக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவே இருந்தது என்று, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர், ECONOMY NEXT ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையையிட்டு தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், விசாரணைகள் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சரைப் பார்த்து சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் அசாதாரணமான உறுதியுடன் இருந்தார் என்றும்,  தனது அரசாங்கம் மீது சிறிலங்கா அதிபர் கூறிய குற்றச்சாட்டுகளையிட்டு அவர் அதிருப்தியுடன் காணப்பட்டார் என்றும் அமைச்சரவை வட்டாரம் தெரிவித்தது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது குற்றம்சாட்டிய சிறிலங்கா அதிபர், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. என்று தெரிவித்த அமைச்சரவை வட்டாரம், சிறிலங்கா அதிபரின் இந்தக் குற்றச்சாட்டினால் அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

அவர் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதையும் வழங்காததால்,அதன் மீது அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, படுகொலைச் சதி தொடர்பான விபரங்களை வெளியிட நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டது. அந்த செய்தியாளர் சந்திப்பை சிறிலங்கா அதிபரின் முன்னாள் இணைப்பு அதிகாரியும், தற்போதைய மூத்த ஆலோசகருமான சிறிலால் லக்திலக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மீது சிறிலங்கா அதிபர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com