தமிழ் සිංහල English
Breaking News

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உடைந்த சிறைகளில் இருந்து 1200 கைதிகள் தப்பி ஓட்டம்.!

கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பாலு, டொங்கலா பகுதிகளில் அளவுக்கதிகமாக கைதிகள் அடைக்கப் பட்டிருந்த சிறைகள் சேதமுற்றதால் அவற்றில் இருந்து சுமார் 1200 கைதிகள் வரை தப்பிச் சென்று விட்டதாக ஸ்ரீ புகு உட்டாமி என்ற நீதித்துறை அமைச்சு அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுலவேசி பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் உள்ள சிறைகளில் இருந்து நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய போது கைதிகள் தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது. சுனாமி தாக்கிய பாலு நகரில் 120 பேரை மாத்திரமே கொள்ளக் கூடிய சிறையில் 581 கைதிகள் அடைக்கப் பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் சிறைக்குள்ளே புக நேரிட்ட போது வாழ்வா அல்லது சாவா என்ற போராட்டத்தின் மத்தியில் தான் இச்சிறைக் கைதிகள் தமது குடும்பத்தினரைப் பார்க்கச் செல்வதற்காகவும் தப்பிச் சென்றிருக்க முடியும் என உட்டாமி விளக்கம் அளித்துள்ளார்.

டொங்கலா என்ற இடத்திலுள்ள சிறையிலிருந்து 343 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை செப்டம்பர் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் பாலு நகரைல நிலநடுக்கம் காரணமாக சுனாமி தாக்கிய போது அதனை முன்கூட்டியே ஏன் அறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 2004 ஆமாண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட மிக வலிமையான சுனாமி அனர்த்தத்தை அடுத்து உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்காக சுனாமி அலைகளை முன்கூட்டியே அறியும் நவீன கருவிகளை இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் சமுத்திரத்தின் முக்கிய பகுதிகளில் நிறுவியுள்ளன.

இந்நிலையில் ஹைதராபாத்தின் கடல் தகவல் தேசிய மையத்தின் இயக்குனர் ஷெனாய் கூறும் போது, ‘அண்மையில் சுலவேசி தீவுப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் இந்தோனேசியாவின் சர்வதேச தொடர்புகளுக்கு தகவல் அளித்தோம். ஆனால் நாம் கடலில் பொருத்தியுள்ள மிதவைகளிலும், கண்காணிப்பு கருவிகளிலும் சுனாமி வருவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. எனவே 3 மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கையை மீளப் பெற்றுக் கொண்டோம்.

ஆனால் எம் கணிப்புத் தவறாகி விட்டது.’ என்றுள்ளார். இதேவேளை நிலநடுக்கம் ஏற்பட்டும் கடலுக்கு அடியில் நிலச்சரிவு ஏற்பட்டு சுனாமி உருவாகி இருக்கலாம். அல்லது சிறிய அளவில் உருவான சுனாமி அலை பூகோள ரீதியாக பெரிதாக மாறி இருக்கலாம். இவ்விரு காரணங்களால் மட்டுமே இந்த சுனாமி, கருவிகளில் பதிவை ஏற்படுத்த முடியவில்லை என்று கூறப்படுவதுடன் எனினும் இது ஒரு ஆச்சரியம் என இந்திய கடல் ஆய்வியல் மையத்தின் தலைவர் பட்டாபி ராமராவ் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com