தமிழ் සිංහල English
Breaking News

கோத்தபாய ராஜபக்ஷவின் ஒரு நாள் பாதுகாப்பு செலவு 35 இலட்சம்.!

அரசாங்கம்  மஹிந்தவின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று  பொது  எதிரணியினர் குறிப்பிடுவது பொருத்தமற்ற விடயம். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு  விசேட அதிரடி படையினர்  42 பேரும் , 28  இராணுவத்தினருமென மொத்தமாக 70 பேர்  கடமையில் உள்ளனர். இவரது பாதுகாப்பிற்கு மாத்திரம்  ஒரு நாளைக்கு 35 இலட்சம் செலவாகுகின்றது என  சட்டம் ஒழுங்கு  பிரதி  அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு 6 அதிரடி படையினரும், 14 பொலிஸ் பிரிவினருமே பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கோத்தபாயவின் விடயத்தில் அரசாங்கம் முழுமையான பாதுகாப்பினையே வழங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகான சிறிகொதாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com