தமிழ் සිංහල English
Breaking News

ஒரு கறுப்பு ஆடு அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து ஆடிய ஆட்டம்.!

யானை அடித்து சாகுறத்துக்கு முன் தான் அடித்து சாகுறான் என்ற கதைக்கேற்ப சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன் தானே அடித்து கொண்டார் .

  தேசிய காங்கிரசில் சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன் இணைந்து கொண்டதன் நோக்கம் அக்கரைப்பற்று மாநகர சபை தவிசாளர் பதவியை குறி வைத்துதான். அவர் எதிர் பார்த்த அந்த பதவி கிடைக்கவில்லை .அதனால் அவர் தனது நண்பர்களிடம் தன் மன ஆதங்கத்தை சொல்லி இருக்கின்றார் .அந்த நண்பர்கள் தங்களது முகநூல்களில் பதிவிட்டது மட்டும்மல்ல தேசிய காங்கிரஸ் தலைவரையும் தாக்கி எழுதி வருகின்றார்கள் .

தேசிய காங்கிரசை விமர்சிக்கின்றவர்கள் யார் என்று ஆராய்ந்தால் அவர்கள்  சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது  .

சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன் எதிர் பாராத நிலையில்  கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தனது இரண்டு மகன் மார்களை தேர்தலில் போட்டியிட வைத்தது சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன்   கொஞ்சமும் கூட விரும்பவில்லை . 

 உள்ளுராட்சி தேர்தல் காலங்களில் தனது எதிர்ப்பை நண்பர்களுடாக வெளியே கொண்டு வந்தவர் .இதனை தலைமை அறியவில்லை . உள்ளுராட்சி தேர்தல் காலங்களில் சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறுகிறார் என்று அவரது நண்பர்கள் முகநூல்களூடாக பதிவிட்டு இருக்கின்றார்கள் . சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன்  வெளியேற்றத்தை அன்றே எல்லோரும் எதிர்பாத்தனர் .

உள்ளுராட்சி தேர்தலுக்குப்பின்னர்  பஹீஜ் மீரா முஹைடீனுக்கும் றிசாத்  மக்கள் காங்கிரசுக்கிடையிலும் நெருக்கம் அதிகரித்துள்ளது . எஸ் . எஸ் .பி மஜீத் அவர்களுடனும் தனது எதிர்ப்பை தொலைபேசியூடாக பலதடவைகள் கூறி இருக்கின்றார் அதாவுல்லாஹ் தனது இரண்டு மகன் மார்களை கட்சிக்குள்  உள்வாங்கிய காரணத்தினால் அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரசிக்கு இருந்த செல்வாக்கு குறைந்து விட்டது என்று யார் யாரெல்லாம் தொடர்பு கொண்டு கேட்டார்களோ அவர்களிடம்  சட்டத்தரணி பஹீஜ் கூறியுள்ளார் .

தேசிய காங்கிரசியின் கறுத்த ஆடு யார் என்று கட்சி தலைமை  அலசி ஆராய்ந்து  வருகின்றது இந்த  கறுத்த ஆடு  இன்னும் சில நாட்களில் வெளிச்சத்துக்கு வந்து விடும்  .

உதுமாலெப்பை தேசிய காங்கிரசிலிருந்து இராஜினாமா செய்வதற்கு முன்னர்  உதுமாலெப்பை தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறுகிறார் என்று வெளிநாட்டில் இருக்கும் ராசிக் முகம்மட் தனது முகநூல்களில் பதிவிட்டுள்ளார் .

அமைச்சர் றிஷாத்தின் ஊடகத்துறையில் பணியாற்றும் சுகைப் என்பவரிடம் சட்டத்தரணி பஹீஜ் கூறியதாக சுகைப் நண்பர் ஒருவரிடம்  கூறிய  விடயத்தை இங்கு பதிவிடு செய்கின்றேன்.      உதுமாலெப்பை மட்டும் அல்ல, அவரைத் தொடர்ந்து சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைடீன் சில நாட்களில் இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்   ,அத்துடன்  பல ஊர்களில் இருக்கும் பல  முக்கியஸ்தர்கள் பதவி விலகத் தீர்மானித்திருக்கிறார்கள். இவர்கள் இப்போது மக்கள் காங்கிரசில் இணைய மாட்டார்கள் தேர்தல் நெருங்கின்ற போது அனைவரும் மக்கள் காங்கிரசில் இணைவார்கள் என்று சுகைப் கூறியுள்ளார் .

உதுமாலெப்பையின்  தலைமையில்  சட்டத்தரணி பஹீஜ் உட்பட பலர் மக்கள் காங்கிரசில் இணைவார்கள் என்பதுதான் உண்மை இதற்கு மாற்று கருத்து கிடையாது . ஓரிரு மாதங்கள் நடுநிலை வாதியாக தங்களை மக்கள் மத்தியில் சித்தரிப்பார்கள் .

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வை மக்கள் மத்தியிலிருந்து பிரிப்பதற்கும் , அரசியலிருந்து ஓரம் கட்டவும் , கிழக்கு மாகாணம் முழுவதும் அதாவுல்லாஹ்வைப்பற்றி பிரச்சாரம் பண்ணுவதற்கு உணர்ச்சி வசப்பட்ட முஸ்லிம் மக்கள் நம்பும் அளவுக்கு ஒரு  பெரிய ஆய்தம் ஒன்றை தயார் செய்து கையில் எடுத்துள்ளார்கள் .

அந்த ஆயுதம் தான் முஸ்லிம் கூட்டமைப்பு , றிசாத் தலைமையில் ஒன்று பட வேண்டும் என்பதற்கான ஒரு  வேலைத்திட்டம் . இதற்கு இணங்க வைப்பதற்கு  உதுமாலெப்பை தயார் படுத்தப்பட்டுள்ளார் .

முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும் அப்போது தான் முஸ்லிம்களின் பிரநி திநித்துவத்தை  பாதுகாக்க முடியும் என்றெல்லாம் அதாவுல்லாஹ்விடம்  பல தடவைகள் எடுத்து கூறினோம் அதற்கு அதாவுல்லாஹ் இணங்க வில்லை அவர் தனி அஜந்தாவில் இயங்குகின்றார் . ஆகவே இன்னும் அந்த கட்சியில் இருக்க முடியாது என்றுதான் நாங்கள் தேசிய காங்கிரசை விட்டு வெளியேறினோம் அதாவுல்லாஹ் வுடனே தனிப்பட்ட காரணத்துக்காக அல்ல சொல்லுவார்கள் மிக விரைவில் .

சோடாப்போத்தல் முஸ்லிம் சமுகம் அப்படியே நம்பிவிடும் என்று கணக்கு போட்டுள்ளார்கள் .

இந்த அரசியல் வியாபாரிகளை சாய்ந்தமருது மக்கள்   இன்னும் நம்ப தயார் இல்லை . அவர்கள் இம்முறையும் மாகாண சபைத் தேர்தலிலும்  தனித்தே சுயேட்சை குழுவாக போட்டியிடுவார்கள்  என்பதுதான் உண்மை .

உதுமாலெப்பையை கிழக்கு மாகாண சபை  முதலமைச்சராக வேட்பாளராக களமிறக்க மக்கள் காங்கிரஸ் பிரதியமைச்சர் அமீறலி  பேசியுள்ளார் தலைவர் றிஷாத்தும் வாக்குறுதி கொடுத்துள்ளார்  . கிழக்கு மாகாணசபை   தேர்தலுக்கு  அம்பாறையில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட றிசாத் வேட்பாளர்களை தயார் படுத்தியுள்ளார் , அதாவது , அட்டாளைச்சேனையில்  உதுமாலெப்பை , அக்கரைப்பற்றில் சட்டத்தரணி பஹீஜ், பொத்துவிலில் முஷ்ரப் ,கல்முனை ஜவாத் , சம்மாந்துறையில் டி .ஏ , இறக்காமம் மன்சூர் , என்று பேசி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது .

.பொத்துவில் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவிலும் கூட முஸ்லிம் காங்கிறசை வெற்றி பெற வைப்பதற்காக, சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட தேசிய காங்கிறசின் ஒரே ஒரு உறுப்பினரையும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் ஆக்கிவிட்டார் அதாவுல்லாஹ் என்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் திரட்டி பேசுவதற்கு தயாராகியுள்ளார்கள் .

மக்களிடம் முஸ்லிம் காங்கிறசை எதிர்ப்பது என்ற ஒரு கொள்கையைச் சொல்லிவிட்டு, உள்ளுக்குள் கூட்டமைப்பை இல்லாமல் செய்ய, மு.காங்கிறசை ஆதரிக்கும் அதாவுல்லாஹ்வின் இந்த கீழ்த்தரமான அரசியலை உதுலெப்பை விரும்பவில்லை. அதனால் தான் கட்சியை  விட்டு உதுமாலெப்பை விலகினார் என்றும் சொல்லுவார்கள் .

அதுமட்டுமல்ல ,குடும்ப அரசியலை இன்னொரு படிக்கு கொண்டு போகும் முகமாக அவருடைய இளைய மகன் தில்ஷான் மற்றும் மருமகன் சாக்கீர் ஹுசைன் என்பவரோடு அஸ்மி கபூரும் உயர் பீடத்திற்கு உள்வாங்கப்பட்டனர் என்ற அதிருப்தியையும் சொல்லியிருக்கின்றார்கள் . 

சரியாகச் சொன்னால், தே.காங்கிரசை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கும்  நபர், ஒரு கறுத்த டைனோசர். மக்கள் காங்கிரஸின் ஊதுகுழலான ஒரு கறுப்பு ஆடு அதாவுல்லாவின் மடியில் ஏறி உட்கார்ந்து ஆடிய ஆட்டம் தான் இவ்வளவு பிரச்சசினைக்கும் காரணமாக அமைந்துள்ளது .

இந்த கறுத்த ஆடு  யார் என்று  கட்சி தலைமையோடு  சேர்ந்து கண்டு பிடிக்கும் நிலையிலிருந்து பஹீஜ் தவறிவிட்டார் . அதனால் பஹீஜ் மீது பழி போடப்பட்டுள்ளது . கட்சியில் பிரச்சினை நடக்கின்ற போதும் கட்சி தலைமையோடு தொடர்பு கொண்டு பேசவும் தவறியுள்ளார் .தான் மீது பழி வருகிறது என்று நினைத்தாரோ என்னவோ  இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? என்பது விரைவில் வெளிவரும் .ஐ .எஸ் .


Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com