தமிழ் සිංහල English
Breaking News

தேசிய காங்கிரசில் இருந்து பஹீஜ் out, உதுமாலெப்பை in..!

எல்லாம் தெரியும் என்று எல்லோரும் நினைக்க கூடாது .சட்டத்தரணி என்றால் எல்லாம் தெரியும் என்ற அர்த்தம் அல்ல  பஹீஜ்  சட்டத்தரணி போட்ட கணக்கு  பிழைத்து விட்டது என்று நினைக்கின்றேன் . தேசிய காங்கிரசின் ஊடாக  அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவியை எதிர்பார்த்து தேசிய காங்கிரசில் இணைந்தவர் பஹீஜ் இக்கனவு நிறைவேறாத காரணத்தினால் அதிருப்தி அடைந்த நிலையில் கிழக்கு மாகாணசபையையும் எதிர்பார்த்தவர் .

அதாவுல்லாஹ் தனது இரண்டு மகன் மார்களையும் கட்சிக்குள் உள்வாங்கியதினால், தான் எதிர் பார்த்த கனவுகள் இக்கட் சியில் நிறைவேற மாட்டாது என்று நினைத்து விட்டார் போல் தெரிகிறது .இதனால் தான் தேசிய காங்கிரசில் பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது .

சட்டத்தரணியான  பஹீஜ் சற்று சட்டத்தை பாவிக்க தொடங்கியுள்ளார் .தான் மட்டும் வெளியேறாமல் பலரையும் அழைத்து செல்ல போட்ட கணக்கில் உதுமாலெப்பையை தலைவராக்கியுள்ளார் . சட்டத்தரணியான  பஹீஜீயின் கருத்தை தீர்க்க தரிசனமாக அலசி ஆராயாமல்  உதுமாலெப்பை எடுத்த எடுப்பில்  எடுத்த முடிவு தான் தேசிய காங்கிரசின்    அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலக காரணமாக அமைந்து விட்டது .

தேசிய காங்கிரசில் இருந்து உதுமாலெப்பை வெளியேறுவதா அது நடக்காத காரியம்  நாங்கள் பிரியமாட்டோம்  பிரிய நினைப்பவர்கள்  உதுமாலெப்பையை  விட்டு விட்டு வெளியேறட்டும் என்று அதாவுல்லாஹ்  இறுக்கமாக கூறியுள்ளார் . உதுமாலெப்பையும் ,அத்தாவுல்லாவையும்  விட்டு பிரிய நினைக்க  மாட்டார் .

அதனால் உதுமாலெப்பை எடுத்த முடிவை  மாற்றி அமைத்துள்ளார் . அதாவுல்லாஹ் பல தடவைகள் உதுமாலெப்பையுடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு  பேசியுள்ளார் . இதனால் இருவர்களுக்கிடையிலும் புரிந்துணர்வு ஏற்பட்டு நல்லுறவு மலர ஆரம்பித்துள்ளது .

 தேசிய காங்கிரசில் இருந்து உதுமாலெப்பை வெளியேற மாட்டார் அவர் தேசிய காங்கிரசில் இருந்தே பயணிப்பார் .

இச்சூழ்ச்சிகளுக்கு  மறைமுகமாக செயற்பட்டதாக கூறப்பட்டு வரும்   சட்டத்தரணி பஹீஜ் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று பேசப்படுகின்றது .இதனால் பஹீஜ்  மட்டும் வேயேற்றப்படுகின்றார் என்பதுதான் உண்மை .

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com