தமிழ் සිංහල English
Breaking News

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை மக்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப வேண்டும் .!

இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவர் கரு ஜெயசூரியா தலைமையில் அந்நாட்டு நாடாளு மன்ற உறுப்பினர்கள் குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வருகை தந்தனர்.

இந்திய அரசின் அழைப்பினை ஏற்று வருகைத் தந்த அக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்ச ருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள், டெல்லியில் குடியர சுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

அதன் பின்னர், டெல்லியில் செய்தியாளர்களை டக்ளஸ் தேவானந்தா நேற்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை மக்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற் கான நடைமுறையை எளிமைப் படுத்தித் தருமாறு இந்திய அர சிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேர் நீண்டநாள் சிறை வாசத்தை அனுபவித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு அவர்களை விடுவிப்பதில் தவறு இல்லை இதனை நான் வரவேற்கிறேன். ஆனால், ராஜீவ் கொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த கொலையில், என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் எனக்கு நேரடி தொடர்பு கிடையாது. இந்த வழக்கில் வீடியோ கான்பரசன்சிங் முறையில் ஆஜராக தமிழக நீதிமன்றம் எனக்கு கடந்த 2011-ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதன் படி நான் இலங்கை இருந்தபடி வழக்கை சந்தித்துக் கொண்டிருக் கிறேன். அதேசமயத்தில், என்னை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதை ஏற்று நான் சென்னை வரத் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com