தமிழ் සිංහල English
Breaking News

ஒலுவில் பொது காணியை களவாடிய அரசியல்வாதி –

ஒலுவில் ஜெலில்.
பொது மக்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்ட சிறுவர் பூங்கா காணியை குறுகிய சிந்தனையுள்ள அரசியல்வாதி வயிற்றுப் பசிக்காக விற்று காசாக்கியதன் விடயமாக. அண்மையில் ஒலுவில் பி.சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சகோதர் ஹம்சா அவர்களால் அட்டாளைச் சேனை பி.சபையில் சமர்பித்த பிரேரணையை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப் பட்டு தவிசாளர் அவர்களின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும் அறியக் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து தவிசாளர் அமானுல்லாஹ் தான் இந்த விடயத்தினை மும்முரமாக எடுத்துச் சென்று உரிய முறையில் விசாரனை நடத்தி விரைவாக மக்கள் பாவனைக்கு பெற்றுக் கொடுப்பதாக கூறியதாகவும் செய்தி பார்க்கக் கிடைத்தது.
உண்மையில் ஒரு விடயத்தினை உறுப்பினர் சபைக்கு கொண்டு சென்றாலும், அதை உரிய முறையில் செயற்படுத்தி வெற்றியடைய செய்யும் முழு அதிகாரமும் அந்தந்த சபை தவிசாளருக்கே உண்டு என்பதே உண்மை.
அப்படி இருந்தும் இந்த காணி சம்மந்தமாக எல்லா ஆதாரமும் இருந்தும், தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் நடவடிக்கைகள் மந்த கதியில் சென்று கொண்டிருப்பது ஏன்?
தவிசாளர் மறைமுகமாக விடயத்தினை கையாண்டு கொண்டிருக்கிறாரா?
இல்லை இப்படியே இந்த விடயத்தை கிடப்பில் போட்டு விடலாம் என்ற எண்ணத்தில் செயற்படுகிறாரா?  இல்லை காணிக்குரிய கணிப்பீடுகள் ஏதும் நடைபெற்று முடிந்து விட்டதா? இல்லை மேலிடத்து அரசியல் அழுத்தம் காரணமாக விடயத்தை மூடி மறைக்க போகிறாரா? என்றெல்லாம் கேள்விகள் மக்கள் மத்தியில் எழவே செய்கிறது.
இது இவ்வாறு இருக்க இன்னும் சில தினங்களில் சபை மீண்டும் கூட இருக்கிறது! தவிசாளர் அவர்களே என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்கள்!
ஏதும் அதிரடி நடவடிக்கை எடுத்து காணியை மக்கள் தேவைக்கு பயன்படுத்த போகிறீர்களா?
அல்லது அதையும் இதையும் சொல்லி காலத்தை கடத்த போகிறீர்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்……
குறித்த அரசியல்வாதியின்  பெயர் மற்றும் இதற்கால களவெடுத்த அரசியல்வாதி யார் என பெயர் இடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com