தமிழ் සිංහල English
Breaking News

ஓரே கட்சியை சேர்ந்த பைசல் காசிம், மன்சூர் அம்பாறை கச்சேரியில் மோதல் .!

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று ( 2018.09.13 ) அம்பாறை கச்சேரி கூட்ட மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் தயாகமகே,மன்சூர்,முன்னால் மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை ஆகியோர் தலமையில் நடைபெற்றது..

இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்கள் ஆற்றுமண் உத்தரவு பத்திரம் வழங்குவது தொடர்பாக குற்றம் சுமத்தி பணிப்பாளர் பண்டாரயிடம் கேள்வி கேட்டார் அப்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதியமைச்சர் பைசல் காசிம் அவர்கள் மன்சூர் MP அவர்களின் குற்றைச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார் இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டது இந்த வாக்குவாதம் தொடர்ந்ததால் மன்சூர் MP அவர்கள் சபையில் இருந்து வெளியேற முயன்றார் சபையில் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்முனை மேயர் மன்சூர் எம்பியை வெளியில் செல்ல வேண்டாம் என்று கட்சியின் மானம் செல்கின்றது என்றும் தயவு செய்து அமைதியாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சபையில் சற்று நேரம் அமளிதுமளி ஏற்பட்டது பின்னர் அம்பாறை GA அவர்களினால் சபை அமைதிப்படுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்தது..

இதே நேரம் பணிப்பாளர் பண்டாரா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவருடைய கோரிக்கையில் 04 பேருக்கு மண் ஏற்றும் அனுமதி பத்திரம் ஏற்கனவே கொடுத்து இருந்ததாகவும் பின்னர் இன்னும் ஒரு அனுமதி பத்திரம் தருமாறும் பணிப்பாளரிடம் மன்சூர் MP கேட்ட போது அவர் இல்லை என மறுத்ததாகவும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது என்பதும் தயாகமகே சபையில் இடைநடுவே ஏற்கனவே வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது..

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com