தமிழ் සිංහල English
Breaking News

தனி விமானத்தில் பறந்து திரியும் பூஜா .!

முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தற்போது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வெவ்வேறு மாநிலங்களில் நடப்பதால் உடனுக்குடன் விமானத்தில் பறந்து சென்று படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்தியில் ‘ஹவுஸ்புல் 4’ படத்தில் நடிக்கும் அவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஐதராபாத்தில் பிரபாஸுடன் நடித்துக்கொண்டிருந்த பூஜா, மறுநாள் ராஜஸ் தான், ஜெய்சல்மர் போன்ற இடங்களில் நடக்கும் ஹவுஸ்புல் 4 படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருந்தது. ஐதராபாத்திலிருந்து ஜெய்சல்மர் செல்ல ஒரு விமான சேவைதான் உள்ளது. அதில் சென்றால் லொகேஷனை சென்றடைய அதிக நேரம் ஆகும் என அறிந்து பரபரப்பானார்.

எந்த படப்பிடிப்புக்கும் தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் சென்று பங்கேற்க வேண்டும் என்ற பாலிசியுடன் இருக்கும் பூஜாவுக்கு புதிய யோசனை பிறந்தது. சில லட்சம் செலவில் தனியாக ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் ஜெய்சல்மர் பறந்தார் பூஜா. குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்புக்கு சென்று பட குழுவினரின் பாராட்டை பெற்றார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com