தமிழ் සිංහල English
Breaking News

அவன்கார்ட் விவகாரம் – 7 சந்தர்ப்பங்களில் இலஞ்சப் பணம் பரிமாறப்பட்டுள்ளது!

அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணைகள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (12.09.18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டது.

இதன்போது தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 47 குற்றச்சாட்டுக்களில் தாம் நிரபராதிகள் என பிரதிவாதிகள் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்திற்கு விளக்கமளித்த அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார, கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 20ம் திகதி மற்றும் 2014 ஜூலை 08ம் திகதி வரையான காலத்தில் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவின் வங்கிக் கணக்குக்கு 07 சந்தர்ப்பங்களில் 355 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுபோன்று பணம் வழங்கியது, அரச உத்தியோகத்தர் என்ற வகையில் பணம் பெற்றுக் கொண்டமை ஆகியன இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தண்டணைக்குறிய தவறு என அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார கூறியுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் இன்றைய வழக்கு விசாரணையின் போது இராணுவ தலைமையகத்தின் இராணுவ சேவை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய கேர்ணல் அசேல குலதுங்கவிடமும் சாட்சிப் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com