தமிழ் සිංහල English
Breaking News

மூன்றாவது திருமணம் முடிக்க முற்பட்ட மன்மத ஆசிரியர் .!

யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் முடித்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் மனைவியை கைவிட்டு, கிளிநொச்சியில் வேறு ஒரு திருமணம் முடித்துவிட்டு அப்பெண்னையும் கைவிட்டுவிட்டு இன்று வவுனியாவில் மூன்றாவது திருமணத்தினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் குறித்து இரண்டாவது மனைவி தெரிவிக்கும்போது, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பகுதியில் திருமணம் முடித்து இரண்டு இளம் பிள்ளைகளுடன் அப் பெண்னைக்கைவிட்டுள்ளார்.
இதனால் அப்பெண் வெளிநாடு சென்று தனது பிள்ளைகளைக்கவனித்து வருகின்றார். கடந்த ஒருவருடங்களுக்கு முன்னர் என்னைத் திருமணம் செய்து கொண்டார்.

இதற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களையும் காண்பித்துள்ளார். தற்போது என்னையும் கைவிட்டு இன்று வவுனியா கூமாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரைத்திருமணம் முடிக்க முயற்சிப்பது எனக்குத் தெரியவந்துள்ளது

எனவே இதனைத்தடுத்து நிறுத்தி இவ்வாறான கயவர்களின் முகத்திரையைக்கிளிப்பதுடன் சமூகத்திற்கு இவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்றே நான் இவ்வாறு துணிச்சலுடன் நடந்துகொண்டுள்ளேன்

கடந்த வருடத்திலிருந்து என்னுடன் முரன்பட்டுக்கொண்டிருந்துள்ளதுடன் சீதனம் கேட்டு வற்பறுத்தியும் வந்துள்ளார்.

இவர் பணத்திற்காகவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். இதனால் எங்களுக்கு இருவருக்கும் இடையே கருத்து முரன்பட்டு என்னைக்கைவிட்டுவிட்டு சென்ற நிலையிலும் என்னுடன் நேற்று இரவு வரையில் தொலைபேசியில் தொடர்புகளுடனே இருந்துள்ளார்.

இதையடுத்து எனக்குத் தெரிந்தவர்களின் உதவியுடன் இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தை அறிந்துகொண்டேன் அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 2017.12.22, 2018.02.03 அன்றைய தினங்களில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நேற்று 2018.09.10 கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றித்திருமணம் முடித்துள்ளதாக முறைப்பாடும் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருந்த திருமணமே ஆலய நிர்வாகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆலய வளவிலுள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்ற திருமணத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

குறித்த மூன்று திருமணங்கள் முடிக்க முயன்ற புதுமாப்பிளை பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் இரண்டாவது மனைவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று இடம்பெறவிருந்த மூன்றாவது திருமணத்தினை ஏற்பாடு மேற்கொண்ட உறவினர்கள் புதுமாப்பிளையான ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com