தமிழ் සිංහල English
Breaking News

நவாஸ் ஷரீப் மனைவி பேகம் குல்சும் இன்று லண்டன் வைத்தியசாலையில் காலமானார் .

சிறுநீர் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்  பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் அவர்களின் மனைவி பேகம் குல்சும் நவாஸ் இன்று லண்டன் வைத்தியசாலையில் காலமானார் .

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி பேகம் குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவுகாரணமாக இன்று உயிரிழந்தார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில்உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்துவருகின்றனர்.

இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர்,கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில்நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவரது மறைவால், ரவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம்நவாஸ் ஆகியோர் பரோல் மூலம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com