தமிழ் සිංහල English
Breaking News

ஒரு வருடத்துக்கு 3000 பேர் தற்கொலை .!

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 3   ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்கொலை செய்து கொள்வதனை தடுப்பது தொடர்பிலான சர்வதேச தினம் இன்றாகும்.  இந்த தினத்தினை முன்னிட்டு சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்நாட்டில்  2586 ஆண்களும் 677 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் திருமண வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் தற்கொலை செய்துகொண்டவர்கள் ஒரு காரணத்திற்காக மாத்திரமின்றி பல காரணங்களாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com