தமிழ் සිංහල English
Breaking News

அரசியலுக்கான முக்கிய முதலீடு இனவாதம் .!

நவீன உலகு மத, கலாசார விழுமியங்களை மோத விடுவதனூடாகவே (cultural crisis) கட்சி அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கின்றது. அரசியலுக்கான முக்கிய முதலீடு இனவாதமும், மதச் சண்டையுமே என்ற நிலை மேலோங்கி வருகின்றது.

நாடுகளின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி நாடுகளிலிருந்தும் விலகி, வெளி நாடுகள் (external nations) என்றே ஆகி விட்டது இதில் பிராந்திய சக்திகளும் (regional powers) கணிசமான ஈடுபாடு செலுத்துகின்றன.

இலங்கையிலே யுத்தம் முடிவுற்றதால் அரசியல்வாதிகளுக்கான முக்கிய அரசியல் மூலதனமின்னை (political capitals) ஒரு பிரச்சினையாக மாறி விட்டிருந்தது. இது மத பீதியை உண்டு பண்ணுதல் என்ற நவீன இந்திய துணைக் கண்ட, ஆசிய நாட்டுத் தன்மைகளை உள்வாங்க வேண்டிய நிலையை இலங்கை பேரினவாதிகளுக்கும் ஏற்படச் செய்தது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.

அது தந்த உற்பத்திகளே BBS போன்ற அமைப்புக்களும் கூட.
(இவர்களை யார் உருவாக்கினார்கள் என்பது முட்டாள்த்தனமான வினா)

ஒரு மதம் நிந்திக்கப்படுவதும், இன்னொரு மதம் மேலாதிக்கம் பெறுவதும் இவற்றைத் தோற்றுவித்தவர்கள் தலைவர்கள் என்ற அரசியல் போலி முகங்களை மேலே கொண்டு வருவதும் என காலம் மாறி விட்டது. அத்தோடு இதிலே பங்கெடுப்பதற்காக கட்சித் தலைமைகள் போட்டி போடுவதும், வாக்கு வேட்டைக்குத் தயாராவமும் நடந்தே வருகிறது.

மாயக்கல்லி
———————-
இதுவொரு பௌத்த மத ஆதிக்கத்தின் வெளிப்படை நிலையாகும். எந்தவொரு பௌத்த பிரஜைகளுமில்லாத இடத்திலே சிலையைக் கொண்டு வந்து வைத்து விட்டு இப்போது அங்கே பன்சல அமைக்கப்பட நிலம் வேண்டும் என்கிறார்கள். உலகிலே இவ்கை ஒரு பக்க ஆதிக்க உணர்வு மேலோங்கி வருகின்ற காலமிது. அதிக சனத்தொகை உடையவனே பலமானவன், அவனே ஆதிக்கமுடையவன் என்ற எண்ணக் கரு மேலோங்கி விட்ட நிலையே இது. ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களே இவை.

இன்று மாயக்கல்லி என்பது ஒரு தேசிய பிரச்சினை. என்றாலும் பிராந்தியத்தை தாண்டிய எந்தப் பலமான குரலுமே இதை எதிர்த்து இதுவரை ஒலிக்க வில்லை. ஒலிக்கவும் முடியாது என்பதே யதார்த்தம். பிராந்திய மக்களான #இறக்காமத்து மக்கள் இந்த விடயத்திலே மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம் விவகாரங்களைத் தேர்தலிலே பேசும் தனி முஸ்லிம் தலைவர்களை உடைய கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றின் மௌனம் எதைச் சொல்லுகின்றது? திகனயிலே 25 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டது, 500 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் கடைகளும் வீடுகளும் உடைக்கட்பட்டது இவற்றிற்குப் பதிலுக்கு ஒரு #புதுபிலிமையாவது யாராவது உடைக்க முடிந்ததா? இதுதான் எமது வீட்டுக்குள் நாம் பேசும் வீரத்துக்கும், யதார்த்தத்துக்குமுள்ள வித்தியாசம் தெரியாமல். இதை நன்கு ஆழமாக யோசிக்க வேண்டும். இது பௌத்த தேசம் அதிலே நாமும் வாழ்கிறோம். நம்மை, நமது இருப்பை பௌத்தர்களால் தீர்மானிக்க முடியும் பௌத்தர்களின் இருப்பையோ, நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது.

ஏதாவது ஒன்றுக்காக நாம் கால நேரத்தைச் செலவு செய்தால் அதில் பலன் கிடைக்க வேண்டும். இல்லை எனின் நாம் விலகி இருப்பதே நல்லது. 2014.10.10 ஆம் திகதிய விஷேட வர்த்தமானி மூலமே அதாவது மஹிந்தயின் ஆட்சிக் காலத்திலேயே இந்த சிலை வைப்புக்கான வித்து தூவப்பட்டது. அதைப் புதிய அரசும் தீவிரமாக நடைமுறைப் படுத்துகிறது. அவர்களுக்கு முழு நாடுமே அவர்களின் சொத்து என்பதே கோட்பாடு. அது தவறானதாயினும் அதுவே அவர்களின் நிலைப்பாடு.

* இவற்றை எல்லாம் விடுத்து இதை நிறுத்தித் தருகிறோம்.

* இதை மயிந்தை அரசு உருவாக்க வில்லை புதிய அரசே உருவாக்கியது என்பதும்

* இதை மயிந்தையே உருவாக்கினார் என்பதும்

எல்லாமே வெறும் அரசியலுக்கான பேச்சுக்கள் இவ்விடத்துக்கு சிலை வந்தது எப்படி மர்மமானதோ அதே போல் இதை அகற்றுவோம் என்பதும் மர்மமே. யாராலுமே ஒன்றுமே செய்ய முடியாது வெறும் அர்த்தமில்லாத சத்தமிடல்களைத் தவிர.

உரிய உயரதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ இதில் மௌனம் காக்கிறார்களே ஏன் ? சட்டத்தரணிகள் கூட ஒழிந்து கொள்கிறார்களே ஏன்?

மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். மாயக்கல்லி என்பது மாணிக்கமடுவிலே இருந்தாலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிகளும், மக்களும் முழு இலங்கை எங்குமே பரந்து வாழ்கிறார்கள் என்பதே உண்மை.
குறிப்பாக #இறக்காமம் மக்களே இது உங்கள் கவனத்துக்கு.

ஏ.எல். நௌபீர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com