தமிழ் සිංහල English
Breaking News

சட்டத்திற்குட்பட்ட வகையிலேயே குடிநீர் தொழிற்சாலை அமைப்பு – தடுத்தால் நீதி மன்றம் செல்வோம்.!

மட்டக்களப்பு புல்லுமலையில் சட்ட ரீதியாக பல அனுமதிகளையும் பெற்று மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் தொழிற்சாலையினை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. என காத்தான்குடி நகர முதல்வரும் புல்லுமலை நீர்த் தொழிற்சாலையின் பணிப்பாளர்களில் ஒருவருமான எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

புல்லுமலை நீர்த் தொழிற்சாலை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு இன்று விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

பல வருடங்களாக தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் புல்லுமலை மக்களின் தண்ணீர் பிரச்சினையினை கடந்த ஐந்து வருடங்களாக அப்பகுதி மக்கள் குடிப்தற்கும் குழிப்பதற்கும் மிருகங்களுக்கு தண்ணி கொடுப்பதற்கும் நாம் எமது தொழிற்சாலையின் மூலம் முற்றிலும் இலவசமாகவே தண்ணீர் வழங்கிவருகின்றோம். இதற்காக மாதாந்தம் நாற்பதினாயிரம் மின்சாரக்கட்டணம் செலுத்துகின்றோம். இந்த கிணறு மூலம் ஒரு நாளைக்கு 39600 லீட்டர் தண்ணீர் எடுக்க இலங்கை அரசாங்கத்தின் நீர் வளச்சபை எமக்கு அனுமதியளித்துள்ளது

இவ்வாரான ஒரு சூழ்நிலையில் யுத்தத்தால் பாதிப்புற்ற அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி பொருளாதாரத்தினை மேம்படுத்த முயற்சிக்கின்ற போது பாராளுமன்ற பிரதிநிதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இனவாத செயல்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட தியேட்டர் மோகன் போன்ற சில இனவாதிகளால் மேற் கொள்ளப்படும் இனவாத செயல்பாடுகள் தமிழ் முஸ்லிம் உறவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை உருவெடுத்துவருவதாகவும் புல்லுமலை நீர் தொழிற்சாலை ஒரு முஸ்லிம் உடையது என்ற ஒரே காரணத்தினாலேயே இவர்கள் நாளைய தினம் ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்ட ரீதியாக பல அனுமதிகளையும் பெற்று மேற்கொள்ளப்படும் நீர் தொழிற்சாலையினை நிறுத்துமாறு இதுவரை எந்த அரச நிறுவனமும் அறிவிக்கவில்லை எனவும் அவ்வாறு நிறுத்துமாறு கோரினால் அதற்கெதிராக நீதிமன்றம் சென்று நியாயத்தை பெற்றுக்கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com