தமிழ் සිංහල English
Breaking News

மதுபானத்தைக் கொடுத்து சேர்த்த கூட்டம் .!

மதுபானத்தைக் கொடுத்து கூட்டத்தை சேர்ப்பதால் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொழும்புக்கு கூட்டத்தை அழைத்து வந்ததனூடாக அரசாங்கத்தை மாற்ற முடியுமா? ஜனாதிபதியை மாற்ற முடியா? பிரதமரை மாற்ற முடியுமா? ஜனாதிபதி தொடர்பில் தீர்மானிக்க நாள் ஒன்று வரும் அது இன்றை தினம் அல்ல.

2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் அப்போதே நாட்டின் ஜனாதிபதி யார் எனவும், பிரதமர் யார் எனவும், அமைச்சர்கள் யார் எனவும் தீர்மானிக்கப்படும்.

கொள்ளைச் செயற்பாடுகளை நாட்டுக்குள் மீண்டும் உருவாக்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், கூட்டு எதிரணியினரும் இன்று முயற்சிகளை மேற்கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.” என்றுள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com