தமிழ் සිංහල English
Breaking News

காளீஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் அதிரடி வில்லியாக சிம்ரன்.!

தமிழில் பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், வில்லியாக செண்டிமெண்ட்டை பின்பற்றுகிறார்.

சிம்ரன் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி அடையும் என்று ஒரு செண்டிமெண்ட் தமிழ் சினிமாவில் இருக்கிறது.

ஒன்ஸ்மோர், நட்புக்காக, பார்த்தேன் ரசித்தேன் ஆகிய படங்களில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படங்கள் அத்தனையும் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

சிம்ரன் உச்சத்தில் இருக்கும்போது இந்த செண்டிமெண்ட் காரணமாக இதுபோன்ற வேடங்களே அவருக்கு அதிகமாக வந்தன.

மீண்டும் நடிக்க வந்துள்ள சிம்ரன் ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடித்துள்ளார்.

காளீஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் அதிரடி வில்லியாக நடித்துள்ள சிம்ரனுக்கு தொடர்ந்து வில்லி வேடங்கள் வருகின்றன.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com