தமிழ் සිංහල English
Breaking News

தமிழ் மக்களும் தமக்கான உரிமைகளை போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும்..!

தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்க வேண்டியது கட்டாயம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பண்டாரவன்னியனின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டிலே 19 இனக் குழுமங்கள் இருக்கிறது. அதனை எமது அமைச்சு ஆவணப்படுத்தியுள்ளது. அவர்கள் தமது உரிமைகளை போராடி பெற்றுக்கொள்ள வேண்டும், அதேபோலவே தமிழ் மக்களும் தமக்கான உரிமைகளை போராடியே பெற்றுக்கொள்ள வேண்டும்.

அழுத பிள்ளைக்கே பால் கிடைக்கும் அது எளிமையான உண்மை. அதுபோல குரல் எழுப்பாமல், போராடாமல் இருந்தால் உரிமை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. போராடிகிடைப்பதை தட்டிபறிப்பதற்கும் யாரும் முயல கூடாது.

ஐனாதிபதியோ அல்லது பிரதமரோ, பௌத்த மகாதேரர்களாக இருந்தாலும் கூட இது ஒரு பல்லின நாடு, பல மொழி பேசும் நாடு என்பதை ஏற்றுகொண்டால் தான் இலங்கை ஒரே நாடு என்ற அர்த்தம் பொருந்தும்.

தமிழர்களின் அபிலாசைகளை பூர்தி செய்ய கூடிய ஒரு தீர்வு திட்டத்தை இலங்கை அரசு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com