தமிழ் සිංහල English
Breaking News

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்றார். .!

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) தலைவர் ஷாபாஸ் ஷெரீப்பும் போட்டியிட்டனர்.

இதில் 176 வாக்குகள் வாங்கி இம்ரான் கான் வெற்றி பெற்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. வாக்கெடுப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்கவில்லை.

இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விழாவில், பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பாகிஸ்தான் காபந்து பிரதமர் நசிர் உல் முல்க், பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மற்றும் பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com