தமிழ் සිංහල English
Breaking News

காந்தியின் விருப்பப்படி ஜின்னா, பிரதமராக இருந்திருந்தால் நாடு இரண்டாக பிரிந்திருக்காது’ .!

மகாத்மா காந்தியின் விருப்பப்படி முகம்மது அலி ஜின்னா பிரதமராகியிருந்தால் இந்தியா பாகிஸ்தான் பிரிந்திருக்காது என்று புத்தமதத் துறவி தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு தலாய்லாமா பதிலளித்தார்.

அப்போது அவர், ‘இந்தியக் கலாசாரம், பாரம்பர்யம் மற்றும் அறிவில் ஆழமாக வேரூன்றி உள்ளது.

அஹிம்சையின் நிலமான இந்த மண்ணின் பாரம்பர்ய அறிவு, தியானம், இரக்கம், மதச்சார்பற்றத் தன்மைகள் உள்ளன.

இந்தியாவின் முதல் பிரதமாக முகம்மது அலி ஜின்னா வர வேண்டும் என்று காந்தி விரும்பினார்.

ஆனால், அதை நேரு மறுத்துவிட்டார். நேரு, தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். நேரு மிகுந்த அனுபவமுள்ளவர்.

ஆனால், அந்த நேரத்தில் தவறுகள் நடந்தன. காந்தியின் விருப்பப்படி ஜின்னா, பிரதமராக இருந்திருந்தால் நாடு இரண்டாக பிரிந்திருக்காது’ என்று தெரிவித்தார்.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com