தமிழ் සිංහල English
Breaking News

குத்தாட்டம் போடுகின்ற யாராயினும் ஓர நாள் குதியறுந்து கீழே விழுந்து விடுவார்கள் .!

இலங்கை மேன் முறையீட்டு நீதிமன்றம் பொது பல சேனாவின் பிதா மகனான ஞான சார தேரருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் (Contempt of Court) வழங்கிய மொத்தமாக பத்தொன்பது வருட கால கடூழிய சிறைத்தண்டணை நமக்க கற்றுத் தந்திருக்கின்றது.

மஞ்சற் காவியைக் உடம்பிலே சுற்றிக் கொண்டால் எது வேணாலும் இந்த தேசத்தில் செய்யலாமென்று கங்கனம் கட்டிக் கொண்டு எல்லா இடங்களிலும் சகட்டு மேனிக்கு வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கின்ற மதச்சாம்பிரணிகளின் சப்த நாடிகளுக்குள்ளே கதகளி ஆடிப்பார்த்திருக்கின்றது ஞானசாரருக்கு எதிராக இலங்கை மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பும் தண்டணையும்.

கடந்த 2016-ஜனவரி மாதம் 25ம் திகதி……ஞானசாரருக்கு சனியும் விடாது கருப்பும் சம கம்பினேஷனில் மிக்சாகி சாம்பிரணி கட்டிய நாள். அன்றைய தினம் ஹோமாகம நீதவான் நிதிமன்றத்தில் காணாமற் போனதாக சொல்லப்படுகின்ற ஊடகவியலாளரான பிரகித் எக்கனலியகொட சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட் கொணர்வு மனு (Writ of Habeau Corpus) விசாரணைக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் விசாரணை முடிந்த கையோடு அந்த ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஞானமென்றால் கெத்துடா நெருப்புடா நெருங்குடா லெவலில் மிக மோசமாக அசிங்கம் அசிங்கமாகப் பேசியதோடு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை லைவில் ஓட விட்டிருந்தார். கோர்ட்டா நமக்கா…அதெல்லாம் சும்மா லுலுலுலு…சும்மா சுசப்பி என்ற ஓவர் டோஸ் நம்பிக்கையில் சும்மா குதி குதியென்று ஞானத்தார் திறந்த நீதிமனற்த்தில் குதிக்க செம காண்டாகி விட்டார் கௌரவ நீதவான்.

ஒரு திறந்த நீதி மன்றத்தில் தன்னிஷ்டத்துக்கு டிஸ்கோ ஆடிய ஞானசார தேரரை அப்போதைய நீதவானாக கடமையாற்றிய ரங்க திசாநாயக்க அவர்களது உத்தரவின் பேரில் உடனடியாக பொலிசார் கைது செய்தனர். நீதித்துறையை இன்ச் சைசுக்கும் மரியாதை செய்யாமல் திறந்த நிதிமன்றத்தில் அசிங்கம் அசிங்கமாகப் பேசி மோசமான நடத்தையை வெளிக்காட்டிய ஞானசார தேரரது இந்த கீழ்த்தரமான நடவடிக்கைகள் தொடர்பில் நீதவான் அவர்கள் இலங்கையின் 1978ம் ஆண்டைய யாப்பின் உறுப்பரை 105ன் கிழ் மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தி ஞானசார தேரரின் இந்த பொறம்போக்குத் தனமான நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்பு என்ற குறற்ச்சாட்டுகளைக் கொண்டுள்ளதா என்று ஆராய்ந்து அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ நீதவான் கோரியிருந்தார்.

இந்த நிலையில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஞானசார தேரருக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொது அலுவலர் ஒருவரை அச்சுறுத்தியமை உட்பட மொத்தமாக நான்கு குறற்ச்சாட்டுகளை மேன் முறையீட்டு நீதிமனற்த்தில் (Court of Appeal) தாக்கல் செய்திருந்தது.

தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த மேன் முறையீட்டு நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளும் நியாயமான சந்தேகத்துக்கப்பால் நிரூபிக்க்ப்பட்டுள்ளன (Beyond the reasonable Doubt) என்ற அடிப்படையில் அந்த நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் ஞானசார தேரரை குற்றவாளியாகக் கண்டு அவருக்கு மொத்தமாக பத்தொன்பது வருட கால சிறைத்தண்டனையையும் விதித்துள்ளது. பத்தொன்பது வரும கால சிறைத்தண்டனையும் ஏக காலத்தில் செயற்பட்டு (Concurrently) ஆறு வருட காலத்துக்குள்ளே பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும் மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு ஏலவே பிணையிலிருக்கின்ற ஞானவை உடனடியாகக் கைது செய்து தண்டனையை அமுல்படுத்துமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தன்னால் எது வெண்டுமானாலும் இலங்கைத் தீவில் செய்ய முடியுமென்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார் தம்பி ஞானம். இப்படித்தான் தனக்குத் தெரியாம சங்கதிகளை தலை மேல் போட்டுக் கொண்டு தலை கால புரியாமல் ஆடினால் பொரடிக்கு சேதம் வந்த சேரும் என்ற மேட்டரில் அசால்ட்டாக இருந்து விட்டார் காவி நிறத்தில் ஒரு கலவரம்.

இலங்கையில் நீதிமன்றத்தை அவமதித்தல் என்பது ரொம்பப் பாரதூரமான குற்றம். அந்தக் குற்றத்துக்கு ஆளாகி விட்டால் அப்புறம் கதை கந்தல்தான். சும்மா கடித்துக் குதறி விடுவார்கள். தாம் தூமென்று நினைத்த படி குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த ஞானத்துக்கு காணாமற் போனதாகச் சொல்லப்படுகின்ற ஊடகவியலாளரான பிரகீத் எக்கனலிகொடயின் காணாமற் போனவர் தொடர்பாக ஹோமாகம நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட் கொணர்வு எழுத்தாணை வழக்கே ஐயம் திரிபற்ற ஆப்பாகி விட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு உள்ளாகி பத்தொன்பது வருட கால கடூழிய சிறைத் தண்டனை பெற்று வெலிக்கடை செல்லவிருக்கின்ற ஞானத்தாருக்கு இன்னுமொரு வழக்கும் மேனீதிமன்றில் தீர்ப்புக்காக நிலுவையிலிருக்கின்றது. அதாகப்பட்டது ஊடக வியலாளர் பிரகித் எக்கனலிகொடயின் மனைவியை ஹோமாகம நீதவான் நிதிமனற்த்தில் வைத்து அச்சுறுத்தியமை குறற்ச்சாட்டின் பெயரில் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆறு மாத கடூழிய சிறைத்தணடனை விதிக்கப்பட்ட ஞானம் அதற்கெதிராக தற்போது மேன் முறையீடு செய்து பிணையிலிருக்கின்றார் என்பது எல்லலோரும் அறிந்த சமாச்சாரம். ஒரு வேளை இந்த மேன் முறையீட்டு வழக்கிலும் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு; தண்டனையும் உறுதிப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் ஏலவே உள்ள ஆறு வருட கால ஜெயில் கழியோடு இந்தக் கழியையும் ஞானம் களி தீர்க்க வேண்டி வரும்.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு ஆளாகி வெலிக்கடை வியர்வையை சந்திக்கவிருக்கின்ற ஞான சேர தேரருக்கு திர்ப்பம் தண்டணையும் வழங்கியிருப்பது மேன் முறயைீட்டு  நீதிமன்றம். இப்போத இந்த மேன் முறையீட்டு நிதிமனற்த்தின் குற்றத் தீர்ப்ப மற்றும் தண்டனைக்கெதிராக ஞானசாரர் உசச் நீதிமன்றத்துக்கு மேன் முறையீட செய்யலாம். அதற்கு அவருக்க பூரண உரிமையுண்டு. ஆனால் அந்த மேன் முறையீட்ட நீதிமனற்த்தின் தீர்ப்பினை திருத்திப்பார்க்க உச்ச நீதிமன்றம் ஒரு போதும் ஆசைப்படாது. ஏனெனில் ஞானசாரருக்கதெிராக உள்ள குற்றச்சாட்ட நீதிமன்ற அவமதிப்பு. ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி கடைசியில் மனுஷனக் கடிச்ச கதையிது.

ஞானம் ஆறு வருஷ காலம் வெலிக்கடையில் யோகா பண்ண வேண்டுமென்பது அவரது தலை விதி. ஓவராக குத்தாட்டம் போடுகின்ற யாராயினும் ஓர நாள் குதியறுந்து கீழே விழுந்து விடுவார்கள் என்பது வரலாறு நமக்கு சொல்லித் தருகின்ற பால பாடம்.

கிண்ணியா சபருள்ளாஹ்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com