தமிழ் සිංහල English
Breaking News

சந்திரிக்கா அம்மையாரின் வலையில் மாட்டியுள்ளார் ஹக்கிம்.!

 ஜெமீல் அகமட் )

ஒரு இனத்தின் பெயரை வைத்து ஒரு சமுதாயத்தை ஏமாற்றி அரசியல் வியாபாரம் செய்து சொகுசா வாழும் றவூப் ஹக்கிமுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆனைக்குழுவில் முறையிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தெரிவித்துள்ளார்

அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சி காலத்தில் றவூப் ஹக்கிம் அவர்கள் பஷீல் ராஜபக்சவுடன் இனைந்து அவர் பதவி வகித்த அமைச்சில் பல பில்லியன் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக குறிப்பிடும் முன்னாள் ஜனாதிபதி முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர்கள் மேடைகளில் ஹக்கிம் மீது கூறிய குற்றச்சாட்டு கோடி பங்கீடு அதையும் கூற மறந்துவிடவில்லை

அதாவது இலங்கை அரசியல் யாப்பு திருத்தத்தில் இரு முறை அல்ல தொடர்ந்து ஒருவர் ஜனாதிபதியாக போட்டியிடலாம் என்ற சட்டத்தை உட்புகுத்த கொண்டு வரப்பட்ட 18வது திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கை உயர்ந்த பல கோடி பணத்தை இலஞ்சமாக மஹிந்த ராஜபக்ச அவர்கள் றவூப் ஹக்கிமுக்கு வழங்கியதாகவும் தூய காங்கிரஸ் உறுப்பினர்கள் மேடையில் கூறியதும் அம்மையார் காதில் விழுந்துள்ளது இந்த விடயத்தில் றவூப் ஹக்கிம் ஒரு கோடி வீதம் சகலருக்கும் பங்கீடு செய்த கதைகளும் மக்கள் காதில் கேட்டு இருக்கலாம்

எனவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கிமுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் இலஞ்ச ஊழல் ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்தால் அவர் மாட்டிக்கொள்வது உறுதி

சாதாரன சட்டத்தரனியாக இருந்து வாழ்ந்த வாழ்க்கையும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக வந்த பின் வாழும் வாழ்க்கையை பார்க்கும் போது வாய் மூடி ஆச்சரியம் அடைகின்றனர் கலகெதர மக்களுடன் இனைந்து நாட்டு மக்களும்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புரிந்து வரும் அரசியல் வியாபாரத்தால் பல அரசியல்வாதிகள் நஸ்டம் அடைந்துள்ளனர் அதனால் ஹக்கிமை அரசியலில் இருந்து ஓரங்கட்ட பலர் ஆர்வமுடன் இருக்கும் போது சந்திரிக்கா அம்மையாரின் வலையில் ஹக்கிம் வந்து மாட்டியுள்ளார் தப்ப முடியாது அப்படி தப்பிவிட குமாரி அக்காவின் ஆவியும் விடாது

பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது போல் இப்போது தான் ஊழலில் மாட்டிவுள்ளார் அதாவது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற போர்வையில் இது வரை ஹக்கிம் சிரித்து சிரித்து பாடலுக்கு நடனம் ஆடி சமுதாயத்தை ஏமாற்றி பெற்ற ஊழல் சொத்துக்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டதா ? அல்லது கற்பனையில் வாழ்ந்து கதற கதற உயிர் பிரிந்த குமாரி அக்காவுக்கு செய்த துரோகத்துக்கு அம்மையார் மூலம் தண்டனையை அல்லாஹ் வழங்கப்போகின்றானா என்பது தெரியாது பொறுத்திருந்து பார்ப்போம் அம்மையார் இலஞ்ச ஊழல் ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்யட்டும்

இன்னும் ஒரு விடயத்தை மக்களுக்கு கூற வேண்டும் அதாவது கூலிப்படைகளை அமர்த்தி போலி முகநுல் மூலம் ஒரு அப்பாவி இறையச்சம் கொண்ட சமுதாய அரசியல்வாதியான அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் பொய் குற்றச்சாட்டு பொய் வழக்குகள் என்று பல வழிகளிலும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆப்பு அடிக்க நினைத்தவர்களுக்கு இறைவன் ஆப்பு அடித்துள்ளான் என்று மக்கள் இன்று சிரிக்கும் காலம் வந்துவிட்டது

எனவே தன் வினை தன்னை சூடும் என்பது போல் றவூப் ஹக்கிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற போர்வையில்  தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு செய்த துரோகத்துக்கு தண்டனை  ஊழல்  அல்லாஹ் பெரியவன்

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com