தமிழ் සිංහල English
Breaking News

தேசிய காங்கிரஸ் தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி சரியான பாதையில் முன்னெடுத்து செல்லும்.!

எம்.ஜே.எம்.சஜீத்)
நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் முஸ்லிம் காங்கிரஸிக்கு 08 ஆசனங்களும், முஸ்லிம் காங்கிரஸிக்கு எதிராக 10 ஆசனங்களும் கிடைக்க  கூடிய வகையில் தங்களின் ஆனைகளை வழங்கி உள்ளனர். புதிய உள்ளுராட்சி தேர்தல் முறையில் உள்ள பலவீனத்தைப்பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர் ஒருவரின் ஆதரவினைப் பெற்று அதிஷ்ட சீட்டிலுப்பின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ்  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பதவியினை பெற்றுள்ளது என்று முன்னாள் கிழக்கு மாகாண் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்ட விஷேட ஒன்று கூடல் (07) அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்ற போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
9- 9 என்ற நிலமையில் அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு நன்மை கிடைக்கும் விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி  சபையின் தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் இப்பிரதேச மக்கள் ஒப்படைத்துள்ளனர்.
நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு பிரதேச சபை தேர்தலுக்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கிய நிகழ்வும், பிரதேச சபை தேர்தலில் வேட்பாளர்களுக்கு பாலமுனை பிரதேசத்தில் இருந்து கொழும்பு செல்வதற்கும் கொழும்பு மாநகரத்தில் இருந்து மீண்டும் பாலமுனைக்கு வருவதற்கும் ஹெலிகொப்டர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு ஏனைய வசதி வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்பட்ட நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறக்கியும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நேரடியாக கைப்பட்ட முடியாத துர்பாக்கிய நிலமை ஏற்பட்டது.
அதிஷ்ட சீட்டிலுப்பின் ஊடாகவே தவிசாளர் பதவியினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியை சென்ற 1994 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு பிரதேச சபை தேர்தலிலும் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் மாத்திரம் பெருபான்மை மக்களால் சிறி லங்கா  முஸ்லிம் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டது. அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் ஆட்சியினை தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் பெறாமல்விட்டமைக்கு நமது இரு கட்சிகளின் பலவீனமும் ஒரு காரணமாகும். இந்த பலவீனத்தை முஸ்லிம் காங்கிரஸ் பயன் படுத்த நம்மவர்கள் காரணமாக செயல்பட்டுள்ளனர் என்பதே யதார்தமாகும்.
இருந்த போதிலும் இறைவன் நாடுகின்றவர்களுக்கே அதிகாரங்களை வழங்குகின்றான் என்ற யதார்த்தினை உணர்ந்தவர்களாக இரு கட்சி உறுப்பினர்களும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி காலம் நிறைவு செய்யும் வரை ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நமது கட்சி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு  பணம் வழங்குவதாகவும், வீடு வழங்குவதாகவும், வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், வீதிக்கான நிதிகள் வழங்குவதாகவும் கூறி முஸ்லிம் காங்கிரஸிக்கு ஆதரவு வழங்குமாறு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களினால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் பெறும் புள்ளிகள் சிலர் செயற்பட்டு கொண்டுயிருக்கின்றனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனரிடம் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கு பிறகு நமது உறுப்பினர்களை பேரம் பேசும் நிலமை தொடர்ந்தால் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம்  மேற்கொண்டு வருகின்றோம்.
உதவித்தவிசாளர் உட்பட 9 உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். பல எதிர்பார்ப்புடன் பிரதேச சபையின் தவிசாளராக வரலாம் என கோடிக் கணக்கான பணத்தினை செலவு செய்துவிட்டு எதிர்பார்த்த தவிசாளர் பதவி கிடைக்காததால் சில அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி சபையின் நடவடிக்கைகளை தவறாக நடாத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.
9-9 என்ற நிலமையினை மறந்து அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆளும் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களுடன் இயங்குவதாக கணவு கண்டு தவறாக செயற்படுவதற்கான பல முயற்சிகளை செய்கின்றனர். இதற்காக சில அதிகாரிகள் உடந்தையாகி வருகின்றனர்.
மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணைக்கு இப்பிரதேச சபையின் நடவடிக்கைகள் சிறந்தாக அமைவதற்கான பங்களிப்பினை வழங்க வேண்டும் அத்துடன் இக்கால கட்டத்தில் சரியாக செயல்பட்டு மக்கள் மன்றில் இது தொடர்பான விடயங்களை முன்வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த விஷேட ஒன்றுகூடலின் போது அட்டாளைச்சேனை பிரசே சபைக்குற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விஷேட குழு ஒன்றும் பிரதேச சபையின் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை ஆவண படுத்துவதற்குமாக வேண்டி விஷேட குழு ஒன்றும் தெரிவுசெய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com