தமிழ் සිංහල English
Breaking News

பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு பகிரங்க மடல்!

கல்முனை மாநாகர சபைக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் முன்வைத்த காலம் முதல் இன்றுவரை கல்முனை மற்றும் இஸ்லாமாபாத், பான்டிருப்பு மற்றும் மருதமுனை, நற்பட்டிமுனை பகுதிகளில் உள்ள தமிழர் தரப்பினரின் வாக்காளர் இடாப்பில் முன்பை விட அதிகமான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

கல்முனைத் தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூர் வாக்காளர்களின் பெயர்கள் கூட சமீப காலமாக கல்முனையில் கடமையாற்றுகின்ற கிராம சேவையாளர்கள் ஊடாக தங்களுடைய விலாசம் மாற்றும் படலமாக சிலர் தங்களுடைய வாக்காளர் உரித்தை கல்முனை தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக (ப்போட் லிஸ்ட்) தெரிய வருகிறது. அதன் அடிப்படையில் பழைய, புதிய வாக்காளர் இடாப்புகளை ஆராய்ந்ததில் மேலும் சந்தேகம் வழுப்பெறுகிறது.

எனவே கல்முனையை விட்டு சாய்ந்தமருது பிரியுமானால் [சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை வழங்கப்படும் பற்சத்தில்] சில வேளை அது கல்முனையில் இருக்கும் முஸ்லிம்களை தமிழர்கள் ஆளும் நிலையை உண்டாக்கலாம். அதற்கான ஆயத்தமாக தமிழர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்களா? எனவும் அச்சப்பட வேண்டி இருக்கிறது.

எனவே கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கௌரவ HMM ஹரீஸ் அவர்கள் இவ்விடயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துமாறும் கல்முனையில் இருக்கும் முஸ்லீம்களின் இறுப்பை உறுதிப்படுத்துமாறும் பிரதியமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அதிகாரம் உள்ளவர்கள் ஆராயுங்கள் மக்களுக்குக்கான தீர்வை பெற்றுக் கொடுங்கள்.

அஹமட் புர்க்கான்
கல்முனை.

Comments

comments

Share this post:

Recent Posts

This site is protected by wp-copyrightpro.com