தமிழ் සිංහල English
Breaking News

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்துப் பேச்சு..!

அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் நீண்ட நேரம் கருத்துப்பரிமாற்றம்… கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற...

த நேஷன் பத்திரிகை:கீத் நோயர் மீதான தாக்குதலுக்குப் பின்னால் சரத் பொன்சேகா!

த நேஷன் பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நோயர் மீதான தாக்குதல் மற்றும் கடத்தலுக்குப் பின்னால் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு தொடர்புள்ளதாக...

அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை..!

ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு  கைத்தொழில் வரத்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில்...

இலங்கை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-சீனா வலியுறுத்தல்!

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நல்லுறவை சீர்குலைக்க சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில், இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. ஹம்பாந்தோட்டை...

பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலினை நாம் வழங்கியுள்ளோம்-அமைச்சர் ரிஷாட்!

‘நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்குமிகுந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒரு உகந்த சூழலினை  வழங்கியுள்ளோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டத்தொடருக்கு (CHOGM) இணையாக இடம்பெற்ற பொதுநலவாய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.  இவ் அமர்வு கடந்த 18 ஆம் திகதி லண்டன் கில்ட்ஹால் இல் நடைபெற்றது. 200க்கும் அதிகமான பொதுநலவாய  தொழில் முனைவோர் இவ் அமர்வில் பங்கேற்றினர், பங்கேற்றிய  அனைத்துதுறையினரும் நிகழ்வுகளை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர்.  அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோருடன் இலங்கைத் தூதுக்குழு உறுப்பினர்கள் இவ் அமர்வில் கலந்து கொண்டனர்.  இலங்கை வர்த்தக திணைக்களம்; ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து இந்த அமர்வினை ஒழுங்கு செய்திருந்தது.  இவ் அமர்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்ககையில்: வர்த்தக மற்றும் முதலீட்டிற்கான பொதுநலவாய இணைப்பு  நிகழ்ச்சித்திட்டத்தில் முதலீட்டு விரிவாக்க மற்றும் வர்த்தக இணைப்பிற்கானவர்த்தக கலந்துரையாடல், டிஜிட்டல் இணைப்பு ஒழுங்குமுறை உட்பட பல  இதர விடயங்கள் பொதுநலவாய உறுப்பினர்களுக்கிடையே உரையாடலின் ஊடாக ஊக்குவிப்பதற்கு   பொதுநலவாயநிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில்   உறுதியாக  உள்ளது.  பொதுநலவாய செயல்பாடுகளின் இலங்கையின் ஆர்வமான பங்களிப்பு எமக்கு பல அமர்வுகளில்  கலந்துகொள்வதற்கும், மறுமதிப்பீடு மற்றும் புத்துயிர் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும்சாதகமாக அமைந்ததோடு  அதன் வர்த்தக மற்றும் பொருளாதார நன்மைகளை எட்டுவதற்கு எளிதாக்கப்பட்டது.  மூன்று நாள் அமர்வுகளின் போது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வர்த்தகத்தினை அதிகரிப்பதற்கான ஆதரவு, புதிய தொழில்வாய்ப்புக்களை வழங்கல், மற்றும் இளைஞர்களுக்குதொழில்நுட்பம் மற்றும் திறன் அணுகல் வழங்கல் என்பன உள்ளடங்கிய ஒரு தளமாக பொதுநலவாய நாடுகள் எவ்வாறு  இருக்க முடியும் குறித்து  மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது.  இவ் அமர்வில்இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனாலி  விஜேரத்ன , ஏற்றமதி அபிவிருத்தி சபை தலைவர் இந்திரா மல்வத்தா,  இலங்கை வர்த்தகதிணைக்களத்தின்  உதவிப் பணிப்பாளர்  அலெக்ஸி குணசேகர, வர்த்தக கவுன்ஸெல்லர்- லண்டன் செனூஜா சமரவீரா ஆகியோரும் உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகளின் பிரதிநிதிகளாகஇருந்தனர்.

ஜூம்ஆவுக்கான விசேட லீவு வசதியை கண்டிப்பாக அமுல்செய்ய நடவடிக்கை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கு சாதகமான பதில்..!

வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் தமது ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 2மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை...

அர்ஜுன ரணதுங்கவின் குடும்பத்தை பிரிக்க சில அரசியல் வாதிகள் சதி..!

தற்போதைய குடும்ப நிலை மற்றும் கட்சி நிலையை தனது தந்தையான ரெஜு ரணதுங்க பார்ப்பதற்கு முன்னர், அவர் இறந்தமை நல்லதே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்...

‘அமெரிக்க ஜி.எஸ்.பி (GSP) வசதியால் இலங்கைக்கு நன்மை’ அமைச்சர் ரிஷாட்.!

புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி புதுப்பிக்கப்பட்ட திகதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி ஆகையினால்,...

ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு..!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருக்கும் ஈரானிய சபாநாயகர் எச்.ஈ.அலி லரிஜனி அவர்களை  மஜ்லிஸூஸ் ஸூரா வின் தலைவர் மௌலவி அஸ்ரப் முபாரக்...

வன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி..!

அண்மையில் சர்வதேசத்தையே உலுக்கிய ஒரு பிரச்சினையாக திகன கலவரம்அமைந்திருந்தது. ஒரு சில பேரினவாத காடையர்கள் முஸ்லிம்கள் மீது எல்லைமீறியகாடைத்தனத்தை கட்டவிழ்து விட்டிருந்தனர். இதன் பின்னால் சில அரசியல் வாதிகள்இருந்ததான ஒரு கதை உள்ளது.இன்று நடைபெறும் சில விடயங்களை பார்க்கின்றபோது, இதன் பின்னால் அரசியல் வாதிகள் இருந்துள்ளார்கள் என்பதோடு சேர்த்து யார்இருந்துள்ளார்கள் என்ற விடயத்தையும் யூகித்து கொள்ள முடிகிறது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் திகனையில்பாதிக்கப்பட்டோருக்கு நஸ்டயீடு வழங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருந்தது.இதுசிறியளவில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம் தான். திட்டமிட்டு, முஸ்லிம்களின்பொருளாதாரத்தை பெருமளவில் சிதைத்துவிட்டு, ஒரு சிறிய தொகையை கொடுத்துவாயை மூடப் பார்க்கின்றார்கள்.யானைப் பசிக்கு சோளகப் பொரி கொடுப்பது போன்றுஎன சுருக்கமாக கூறிவிடலாம். இந் நஸ்டயீடு வழங்கும் அமைச்சரவை முடிவில் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய ஒருமுக்கிய விடயம் நடைபெற்றுள்ளது. இக் கலவரத்தின் போது மரணித்த மூவருக்கும் தலாஐந்து இலட்சம் ரூபாய் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளது.அப்படியானால், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டபோது, தவறுதலாக, தன் கையில் வைத்திரிந்த பெட்ரோல் பொம் வெடித்து,மரணித்தவருக்கும் ஐந்து இலட்சம். இவர் தவிர்ந்து, மரணித்த, ஏனைய இருவரும்அநியாயமாக மரணத்தை தழுவியவர்கள். இக் குறித்த நஸ்டயீடு வழங்கும்தீர்மானத்தின் ஊடாக இவர்கள் மூவரும் சமமாக்கப்பட்டுள்ளார்கள்.இது அநியாயமாகமரணித்த இருவரினதும் மரணத்தை ஒரு வகையில் கொச்சைப் படுத்துகிறது எனவும்கூறலாம். குறித்த பெட்ரோல் பொம் வெடித்து, மரணித்தவர், தன் மரணத்தை, தானாகதேடிக்கொண்டவர். இவர் தொடர்பில் அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை.அவ்வாறு அனுதாபப்படுவதாக இருந்தால், சமூகத்துக்காக போராடி, உயிர் நீத்தவராகஇருக்க வேண்டும். குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம், அந் நபர் ஒரு சமூகதியாகி போன்று நோக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம்,இவ்வரசானது கலவரத்தில் ஈடுபடுவோரை ஊக்கிவித்துள்ளது எனலாம். இச் செயலானது, இதன் பின்னால் இவ்வரசினர் உள்ளார்கள் என்ற உண்மையைதெளிவாக்குகிறது. இன்னுமின்னும், இவ்வரசை நம்பி, பின்னால் செல்வதைப் போன்றமடமை வேறு எதுவுமில்லை. அ அஹமட், ஊடக செயளாலர், முஸ்லிம் முற்போக்கு முன்னணி.

This site is protected by wp-copyrightpro.com